Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!

    உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!

    அலைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது. 

    இன்றைய அறிவியல் உலகில் அனைத்திற்கும் மின் சாதனங்கள் வந்துவிட்டன. அதேபோல மின் வாகனங்கள் மற்றும் மின்சார ரயில்களும் பெருகி வருகிறது. 

    அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காதவாறு, விமானம் ஒன்றை தயாரிக்க பொறியாளர்கள் களத்தில் இறங்கினர். அப்படி அவர்கள் டர்பன் ரக என்ஜின் மூலமாக விமானத்தை இயக்கி சாதனை செய்துள்ளனர்.

    விமானத்திற்கு எப்போதும் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான பிஸ்டன் ரக என்ஜின்களுக்கு பதிலாக மின் சக்தியால் இயங்கக் கூடிய என்ஜின்கள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த விமானம் வானில் 2 மணி நேரம் பயணிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. அதனால், இது நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது இல்லை. இந்த அலைஸ் விமானத்தில் அதிகபட்சமாக 9 பேர் பயணிக்கலாம். 

    இதையும் படிங்க: ஆயுத பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    மேலும், இந்த விமானத்தில் அதிகபட்சமாக 2,500 பவுண்டுகள் அதவாது 1,100 எடையை சுமந்து கொண்டு பறக்க முடியும். அதே நேரம் அதிகபட்சமாக 480 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். மேலும் 250 கடல் மைல்கள் அதாவது, 400 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. 

    இந்த விமானம் வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அலைஸ் விமானம் வானில் 3,500 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் பறந்தது. 

    இந்த அலைஸ் விமானம் இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஏவியேஷன் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    வணிக பயன்பாட்டுக்கு விமானத்தை தயாரிப்பதற்கான முக்கிய தரவுகள் கிடைத்துள்ளன. மேலும், விமானத்தின் அமைப்புக்கு குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறது என எவியேஷன் விமான நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிகோரி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....