Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ரேஷன் கடைகளில் 'நோ கோல்மால்' கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதி வந்துவிட்டது!

    இனி ரேஷன் கடைகளில் ‘நோ கோல்மால்’ கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதி வந்துவிட்டது!

    கருவிழி பதிவு மூலமாக ரேஷன் பொருட்களை பெறும் வசதி வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

    ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேடு இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேட்டுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இது சாத்தியமானால், அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அக்டோபர் 15-ம் தேதிக்குள் சில கடைகளில் மட்டும் சோதனை முறையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட நபர், யாரைப் பரிந்துரை செய்கிறாரோ, அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்தால், மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நிலம் கையகப்படுத்த சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.. என்எல்சிக்கு அன்புமணி எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....