Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்காலையில் பால் குடிக்கலாமா? ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்ன?

    காலையில் பால் குடிக்கலாமா? ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்ன?

    காலையில் பால் குடிப்பதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருப்போம். காலை உணவு கூட சாப்பிடாமல், பால் மட்டும் குடித்துவிட்டு அந்தநாளை தொடங்குபவர்கள் அதிகம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை வேளையில் பாலை அதிகமாக குடிக்கின்றனர். இரவில் தூங்க போகும் போதும் நிறைய பேர் பால் குடிக்கின்றனர். 

    இருப்பினும் காலை வேளையில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் பிரச்சனைகள் வருமா? பால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் சில தகவல்களை நமக்கு சொல்கிறது. 

    வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

    ஆயுர்வேத மருத்துவத்தின் படி காலை வேளையில் பால் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கிய காரணமாக, நாம் வெறும் வயிற்றில் பால் குடிக்கும்போது நமது உடலில் அதிகளவு இன்சுலின் சுரக்கிறது.  அப்படி சுரப்பது உடலுக்கும் தோலுக்கும் தீமை தரக்கூடியது. மேலும், இப்படி குடிப்பதால் தோளின் பளபளப்பு தன்மை அதிகமாகப் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

    காலை வேளையில் பால் குடிப்பது நல்லதா?

    காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பது செரிமான மண்டலத்திற்கு ஆரம்பத்திலேயே அதிக வேலையை கொடுப்பது போன்றதாகும். பிறகு காலை உணவை உண்ணும்போது செரிமானம் அடைய தாமதம் மற்றும் சற்று கடினம் இருக்கலாம். இதனால் வயிற்று வலி, குடற்புண், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    பால் குடிக்க சிறந்த நேரம் எது?

    ஆயுர்வேத மருத்துவத்தின் வழிகாட்டுதலின்படி பார்ப்போமானால், மாலை வேளையில் பால் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. பால் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்தாலும், அது மிக எளிதில் செரிமானம் செய்யக்கூடிய உணவாக தான் உள்ளது. பால் நாம் ஓய்வில் இருந்தாலும் புத்துணர்ச்சியை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில், மாலையில் பால் குடிக்கும் போது நரம்பு மண்டலத்துக்கு மிகவும் நல்லது.    

    இதையும் படிங்க: 2030-ல் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? உலக இதய தின சிறப்பு பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....