Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ்...எச்சரிக்கப்பட்ட காவல்துறை..உயர்நீதிமன்ற தீர்ப்பால் சலசலப்பு..

    வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ்…எச்சரிக்கப்பட்ட காவல்துறை..உயர்நீதிமன்ற தீர்ப்பால் சலசலப்பு..

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் நடத்த திட்டமிட்டிருந்த பேரணிக்கு, தமிழக காவல்துறை நேற்று அனுமதி மறுத்த நிலையில், தற்போது 6-ம் தேதி பேரணி நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

    தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகளை நடத்திக்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்ததோடு, தமிழக காவல்துறையிடமும் முறையான அனுமதி பெற்று பேரணியை நடத்த உத்தரவிட்டிருந்தது.

    இதையும் படிங்க: ரூ.29 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்! குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

    மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

    காவல்துறையின் இந்த அனுமதி மறுப்பை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்திக்கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 6-ஆம் தேதி தேதி பேரணிக்கு அக்டோபேர் 31-க்குள் அனுமதி அளித்து பதில் தராவிட்டால், காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....