Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஹலோ.. ஹலோ.. நீங்களும் சொல்லுங்க.. இன்று உலக ஹலோ தினம்

    ஹலோ.. ஹலோ.. நீங்களும் சொல்லுங்க.. இன்று உலக ஹலோ தினம்

    ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஒரு உணர்வு உண்டு. எல்லாவித உணர்வையும் ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா? என்று கேட்டால்… ஆம் அது தான் ஹலோ… நவரசத்தையும் ஓர் வார்த்தையில் சொல்லிட முடியும் என்றால் அது ஹலோ என்ற வார்த்தையில் மட்டுமே…

    இன்றைய நவீன உலகில், நின்று பேசுவதற்கு கூட நேரமில்லாமல், நாம் வேகமாய் பறந்து செல்கிறோம். அந்தளவுக்கு நம்மை அறிவியலும் அதன் வளர்ச்சியும் சென்று கொண்டு இருக்கின்றன. 

    அவற்றில் மிக முக்கியமானதாக அனைவரிடமும் காணப்படுவது கைப்பேசி தான். முதலில் தொலைபேசி எங்கோ ஊர் இடத்தில் இருக்கும், அப்போது ஓர் நற்செய்தியையோ? துக்க செய்தியையோ கேட்க.. சொல்ல..  பல மைல் தூரம் இருக்கும் உறவுகளிடையே பகிர்வதில் மகிழ்ச்சியும் ஒரு மன நிம்மதியும் கிடைக்கும். ஆனால் இன்றைய காலத்தில்,  அனைவரிடத்திலும் கைபேசியும், அலைபேசியும் இருப்பதால், தொலைப்பேசியின் பயன்பாடு குறைந்தது என்றே சொல்லலாம். அதேபோல் அருகருகே இருந்தாலும் கைப்பேசி அழைப்பில் தான் செல்கிறது காலம்… இருப்பினும் இந்த அனைத்து சாதனங்களையும் பயன்படுத்தும் நாம் முதலில் கூற வரும் வார்த்தை என்றால் அது ஹலோ தான்.. 

    கோவமோ, குறையோ, நிறையோ, பாசமோ, வேலையோ, அன்போ, அக்கறையோ ஆக மொத்தத்தில் எதையோ ஒன்றை பகிர முதலில் நாம் சொல்லும் வார்த்தை இந்த ஹலோ தான்… 

    ஹலோ யாரும் சொல்லி கொடுக்கவில்லை அதுவாய் பரவியது பல நாடுகளுக்கும், பல மொழி பேசும் மக்களுக்கும். உண்மையில் ஹலோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? 

    ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழியிலிருந்து வந்தது தான் இந்த ஹலோ. இதற்கு நம் தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. 

    சரி ஹலோவை ஏன் சொல்ல வேண்டும் முதலில் இதை யார் பயன்படுத்தியது என்று கேட்டால், நிச்சயம் நாம் மறந்திட முடியாது ஒருவரை…

    அவர் தான் அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல். இவர் முதன் முதலில் 1874 ஆம் ஆண்டு தொலைபேசியை கண்டறிந்தார். இவர் இந்த கண்டுபிடிப்பை விக்டோரியா மகாராணியிடம் செயல் முறைபடுத்தி காட்டினார். அப்போது அவர் முதன் முதலில் உபயோகித்த வார்த்தை தான் ஹலோ.. 

    alexander graham bell

    ஹலோ அது அவருடைய மனைவியின் பெயர். அலெக்ஸ்சாண்டரின் மனைவியின் முழுப் பெயரான மார்கரெட் ஹலோ என்பதை அவர் சுருக்கி அவ்வாறு அழைத்தார். அப்படி அழைக்க முக்கிய காரணம். அலெக்ஸ்சாண்டரின் சோதனை காலத்தில் அவரது மனைவியே உறுதுணையாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனை காதலாக அன்பாக வெளிப்படுத்தும் விதமாகவே அலெக்ஸ்சாண்டர் கிரஹாம்பெல், ஹலோ என்ற தனது மனைவியின் பெயரை அழைத்தார். இப்படி உணர்ச்சியை வெளிப்படுத்தவே ஹலோ என்ற வார்த்தை பல மொழிகளை கடந்து இன்று உலக ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. 

    அதற்கு காரணம் இரண்டு நாடுகளுக்குள் இடையே நடைபெற்ற போரின் நினைவு தான்… 1973 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கிடையே சண்டை முடிந்து சமாதானம் ஆன தினத்தை  நினைவுக்கூறும் விதமாகவே உலக ஹலோ தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதற்கு முன்னதாக ஹலோ வார்த்தை எழுத்து பூர்வமாக 1833 ஆம் ஆண்டு டேவிட் கிரேக்கட் எழுதிய ‘தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசன்ட்சிட்டியஸ் ஆப் கால்’ என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளிவந்தது.

    நீங்களும் ஹலோ தினத்தில் இணைய விரும்பினால், குறைந்தது 10 பேரிடம் ஹலோ என்ற உணர்வை வெளிப்படுத்தி மகிழுங்கள்.. 

    ஒருவரை அழைக்க அன்புகூற, உறவின் ஆரம்பமாக, இதோ உங்களுக்கும் எனது ஹலோ…

    கால்பந்து உலகக் கோப்பை; கத்தார் அணியை வீழ்த்திய ஈகுவடார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....