Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரைப்படத்திற்கு திரைப்படம் முன்னேற்றம்; லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்!

    திரைப்படத்திற்கு திரைப்படம் முன்னேற்றம்; லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்!

    2017 ஆம் ஆண்டுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் என்ற பெயர் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு ஒலித்ததா என்றால்? நிச்சயம் இல்லை. மாநகரம் என்ற திரைப்படம் மார்ச் மாதம் 2017-ல் வெளியாக படத்திற்கு எவரும் எதிர்ப்பாரா வகையில் வரவேற்பு கிடைத்தது. மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு அதீத திரைப்பிரியர்களுக்கு லோகேஷ் கனகராஜ் என்ற பெயர் பரிட்சியப்பட்டது. 

    lokesh kanagaraj

    அதன் பிறகு, லோகேஷ் கனகராஜ் எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி பரவலாக்கப்பட அதற்கு பதிலாய் வந்து நின்றது கார்த்தியின் கைதி. கைதி திரைப்படத்தின் ஒவ்வொரு செய்தியும் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது, லோகேஷ் கனகராஜ் பெயரை இன்னும் பரவலாக்கியது.  கைதி அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் பெயரை பெரும் வட்டாரமே அறியும் அளவுக்கு ஒரு செய்தி வந்தது. ஆம்! நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதுதான் அந்த முக்கிய செய்தி. இதன் பிறகு  லோகேஷ் கனகராஜ் என்ற பெயர் இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்துவிட்டது.

    master

    கைதி திரைப்படம் வெளிவந்த பின்பு லோகேஷ் கனகராஜ் மீது திரையுலக ரசிகர்கள் பெரும் நம்பிக்கையை வைக்க ஆரம்பித்தனர். அந்நம்பிக்கையை காப்பாற்றும் விதமாகவே மாஸ்டர் திரைப்படமும் அமைந்தது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் அவர்கள் 50 சதவீதம் என் சாயல் திரைப்படம் என்றும் 50 சதவீதம் விஜய் திரைப்படம் என்றும் வகைப்படுத்தினார். இந்த வகைப்பாடு பலருக்கும் பிடிக்க, தளபதி விஜய்யை வைத்து 100 சதவீத லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை இயக்குமாறு ரசிகர்கள் பிரியப்பட்டனர். 

    vikram

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த படம்தான், விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என இந்திய திரையுலகின் சிறந்த நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்க தமிழ் திரையுலகம் வெகுநாட்களுக்குப் பிறகு இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் வகையிலான வெற்றியை விக்ரம் படம் பெற்றது. தென்னிந்திய அளவில் பிரபலமாக இருந்த லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் பிரபலமானார். 

    lokesh

    மேற்கூறிய படி திரைப்படத்திற்கு திரைப்படம் முன்னேற்றம் அடையும், திரைப்படத்திற்கு திரைப்படம் பிரபலமாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று! 

    தற்போது, விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தில்  நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற  பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 

    இந்திய அளவில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் லியோ மூலம் உலகளவில் உள்ள திரைப்பிரியர்களிடம் சென்று சேர்வாரா என்பதை பொறுத்திருந்து காணவேண்டும்.

    loki

    வங்கி ஊழியராக இருந்து தமிழகத்தின் முக்கிய இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு தினவாசல் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....