Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை

    இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை

    இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

    இந்தோனேஷியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வானது இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தா வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மீட்பு பணியினரும், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். 

    நிலநடுக்கம் சார்ந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், இந்தோனேஷியாவில் இதுவரையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....