Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..

    பெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..

    தென்காசி மாவட்டத்தில் 40 வயதுமிக்க பெண் காட்டு யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

    தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் வனப்பகுதியில் தலையணை அமைந்திருக்கிறது. இந்த வனப்பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு அங்கமாக உள்ளது. இப்பகுதியில் எப்போதும் போல, சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது, ஒரு காட்டு யானை வீழ்ந்து கிடப்பதையும், அதைச் சுற்றி நிறைய காட்டு யானைகள் அந்த யானையை பார்த்தவாறு நிற்பதையும் வனப்பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இதர யானைகளையெல்லாம் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர், வனத்துறையினர். 

    இதன்பின்னர், வீழ்ந்து கிடந்த யானையை நெருங்கிய வனத்துறையினர், 40 வயதுமிக்க பெண் யானை நோய்வாய்ப்பட்டதால் எழுந்து நடமுடியாமல் இருந்துள்ளதை கண்டுகொண்டனர். 

    இச்செய்தியை உடனடியாக மருத்துவர்களுக்கு கடத்தப்பட, வனத்துறை கால்நடை மருத்துவர் குழு மற்றும் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவக் குழுவினர் நேரில் வந்து யானைக்குச் சிகிச்சை அளித்தனர். யானைக்கு குளுக்கோஸ், ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன.

    மேலும், பழங்கள், தென்னை ஓலை போன்ற உணவுகள் யானைக்கு கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் யானை திடீரென உயிரிழந்தது. யானையின் சில பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    நிகழ்த்தப்பட்ட உடற்கூராய்வின்படி, குடலில் ஏற்பட்ட நோய்த் தாக்கமே யானை உயிரிழப்புக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: புதுச்சேரி அரசை எச்சரித்த அதிமுகவினர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....