Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புகோடை காலத்தில் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று குழப்பமா? - இதை படியுங்கள்!

    கோடை காலத்தில் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று குழப்பமா? – இதை படியுங்கள்!

    • முதலில் இது கோடை காலம் என்பதால், குழந்தைகளுக்கு பருத்தியால் ஆன தளர்வான ஆடைகளை அணிவியுங்கள். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 துணிகளை உபயோகப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அலர்ஜி வேர்க்குரு போன்றவை தடுக்கப்படும்.
    •  தினமும் உங்கள் வீட்டுக்கு சுட்டிஸ்க்கு எண்ணெய் வைக்க மறவாதீர்கள். காலையில் எழுந்தவுடன் தலையில் எண்ணெய் வையுங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்தது. இதன் முலம் குழந்தையின் உடல் சூடானது குறையும்.
    • அதே போல குழந்தையின் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விடுங்கள். இதனால், குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைகளை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
    • வெயில் நேரத்தில், குழந்தைகளுக்கு அதிகமான அளவு தண்ணீர் புகட்ட வேண்டும். அவர்கள் குடிக்க மறுத்தால் அல்லது விளையாட்டு சுவாரஸ்யத்தில் மறந்து விட்டாலும் …. தாய்மார்கள் மறக்காமல் 3 லிட்டர் தண்ணீர் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கோடை நேரத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்ற காய் பழங்களையும் எடுத்து கொள்ளலாம்.
    • தண்ணீர் அதிகம் குடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகள் தவிர்க்கப்படும். அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
    • கோடை காலங்களில் குழந்தைகளை காலை மாலை என 2 முறை கண்டிப்பாக குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடல் உஷ்ணம் குறைக்க படும். அவர்களும், சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வாரத்தில் ஒரு முறையேனும், எண்ணெய் மசாஜ் செய்து குளிக்க வைப்பது இன்னும் சிறந்தது.
    • வெயில் காலங்களில் முடிந்தவரை ஜங்க் ஃபுட் உணவு முறைகளை அறவே தவிர்த்திட பாருங்கள். இதனால் , குழந்தைகளுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். தினமும் அவர்கள் உணவில் கீரை, அவித்த பயறுகள், பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    இதன் முலம் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

    இதையும் படிங்க; புனிதப் பண்டிகையான ரமலான் குறித்த சிறப்பு தகவல்கள்! உங்களுக்காக இதோ!

    தீபாவளியைக் குறி வைக்கும் ‘சர்தார்’: கார்த்தி படம் குறித்து முக்கிய தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....