Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் ; ஒருவர் பலி!

    ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் ; ஒருவர் பலி!

    கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், செருவத்தூரில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு துரித உணவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எப்போதும் போல் ஷவர்மா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்கள். பள்ளி மாணவர்கள் 15 பேர் உட்பட 30 க்கும் மேற்பட்டோருக்கு ஷவர்மா உணவு அன்று இரவும் மறுநாளும் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுக்கு, காய்ச்சல், வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. 

    இவர்கள், ஷவர்மா சாப்பிட்டதால் தான் இது மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதரத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் பாதிப்படைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் ஒரு பள்ளி மாணவி சுகாதாரக் கூடத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். பின், உடல்நலம் மிக மோசமான நிலைமைக்கு சென்றதால், அம்மாணவி மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களில் பலரும் பள்ளி மாணவர்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. 12 ஆம் வகுப்பில் படித்த இம்மாணவி, தனது பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் தந்தை 5 மாதத்திற்கு முன் தான் காலமாகினார் என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனையடுத்து, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த உணவகத்திற்கு அரசாங்க முத்திரை வைத்து மூடிவிட்டனர். மேலும் இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

    துரித உணவால் ஏற்பட்ட இந்த துயரச் சம்பம், மக்களின் மனதை பதப்பதைக்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க; தல தோனி மட்டுமல்ல, மொத்த அணியுமே கம்பேக்தான் : புதிதாய் எழுகிறது மஞ்சள் படை !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....