Monday, March 18, 2024
மேலும்
  Homeசிறப்பு கட்டுரைபுனிதப் பண்டிகையான ரமலான் குறித்த சிறப்பு தகவல்கள்! உங்களுக்காக இதோ!

  புனிதப் பண்டிகையான ரமலான் குறித்த சிறப்பு தகவல்கள்! உங்களுக்காக இதோ!

  முஸ்லீம்கள் 5 கடமைகளை முக்கியமானதாக கருதுவது வழக்கம். அதில் மூன்றாம் கடமையாக ரமலான் நோன்பு இருந்து வருகிறது. இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில், ரமலான் மிகவும் விஷேசமானது. அரபுகளின் பிறை, வருடத்தின் 9 வது மாதமாகத் திகழும் ரமலானை, புனித மாதமாக உலக இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம். இம்மாதத்தில், பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள், நோன்பு இருப்பது இவர்களின் வழக்கம்.

  இஸ்லாம் கூறுவது

  இறைத்தூதரான முஹம்மது மூலம், மனிதர்களுக்கு நல்வழி காட்டும் எண்ணத்தில், இறைவன் அருளியது தான் திருக்குர்ஆன் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை. ஒரு நூலாக மட்டுமல்லாமல், 23 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக அருளப்பட்ட போதனைகளின் தொகுப்பே, திருக்குர்ஆன் ஆகும். இதனுடைய முதல் வசனம் “அருளப்பட்ட மாதமே ரமலான்”. இக்காரணம் கொண்டு தான், இம்மாதம் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டது. கட்டாயமாக அனைத்து முஸ்லீம்களும், இதைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

  ரமலான் பிறைக்கு, முன்பு நாள் முதல் அந்த மாதத்தின் இறுதி நாள் வரை, அதிகாலையில் இருந்து அந்திமாலை வரை, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உணவு உண்ணாமல், தண்ணீர்ப் பருகாமல், தவறான கெட்ட வார்த்தைகளை பேசாமல், எந்தவித பாவச் செயல்களிலும் ஈடுபடாமல் இருந்தால் மட்டுமே, நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் எழுதப்பட்ட விதி. அதனடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.

  இந்த மாதம் முழுக்க உடல், மனம், ஆன்மா என அனைத்திற்கும் பயிற்சி அளித்து, இனி வரவிருக்கும் காலங்களில், அறம், நன்னெறி சார்ந்து வாழும் மனிதனாக, இறைவனுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே நோன்பின் முக்கிய நோக்கமாகும்.

  இஸ்லாமியத்தில் மொத்தமாக இரு பண்டிகைகள் உள்ளன. முதலாவதாக, ஈகைத் திருநாள் என அழைப்படும் நோன்புப் பெருநாள். இரண்டாவதாக, தியாகத் திருநாள் என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். ஈகைத் திருநாள், என்பது இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதுமாக நோன்பிருந்து, ஷவ்வால் மாதத்தினுடைய முதல் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்நன்னாளில், ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குவது, அவர்களுடைய வழக்கமாகும்.

  தியாகத் திருநாள் என்பது துல் ஹஜ் மாதத்தில், பிறை 10-ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது கொண்டாடப்படுவதாகும். அந்நாளில் இறைத்தூதரான இப்ராஹிம், அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, கால்நடைகளை குர்பானி கொடுத்து, கறிகளை ஏழைகள் மற்றும் தங்களின் உறவினர்களுக்கு வழங்குவார்கள்.

  நேற்றுடன், தமிழ்நாட்டில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் ஆகாயத்தில் பிறையைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், நேற்று பிறை எங்கும் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது பற்றி, தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூபி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஹிஜ்ரி 1443 ரமலான் மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் மே 1, 2022 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், மற்ற மாவட்டங்களும் காணப்படவில்லை என்பதால், செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் மே 3, 2022 தேதி அன்று ஷவ்வால் மாதம் முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது. ஆதலால், ஈதுல் பித்ர் செவ்வாய்க்கிழமை மே மாதம் 3, அன்று கொண்டாடப்படும்.

  அனைவருக்கும் தினவாசல் சார்பாக, இனிய ரமலான் பண்டிகை நல்வாழ்த்துகள்.

  இதையும் பாருங்கள்.

  ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த துயரச்சம்பவம் ; ஒருவர் பலி!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....