Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புஆடுகளைத் தாக்கும் நோய்கள்: சிறந்த பாதுகாப்பு முறை எது?

    ஆடுகளைத் தாக்கும் நோய்கள்: சிறந்த பாதுகாப்பு முறை எது?

    ஆடு வளர்ப்பில் மிக முக்கயமானது பராமரிப்பு தான். நோய்கள் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும், ஆடு வளர்ப்பில் நல்ல இலாபத்தைப் பெறலாம். இங்கு, ஆடுகளைத் தாக்கும் சில நோய்களும் மற்றும் அவற்றை நாம் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

    நுண்ணுயிரி நோய்களில் மிக முக்கியமானது அடைப்பான் நோய். இந்நோய் ‘பேசில்லஸ் ஆந்த்திராசிஸ்’ எனும் நுண்ணுயிரியால் வருகிறது. இந்நோய் தாக்கிய ஆடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு , திடீரென்று இறந்து விடும். இப்படி இறந்த ஆடுகளின் மூக்கு, காது மற்றும் ஆசனவாய் பகுதிகளில் இருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறும். இது, முக்கியமான அறிகுறியாகும்.

    இந்நோய் வராமல் தடுக்க ஆட்டுக் தொழுவத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த நோயை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால் எளிதில் கட்டுப்படுத்தி விட முடியும். தொண்டை அடைப்பான் ஆடுகளின் தொண்டைப் பகுதியில் ‘பாஸ்ச்சுரல்லா மல்டோசியா’ என்ற நுண்ணுயிரி எப்பொழுதும் இருக்கும்.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இது பெருகி நோயை கட்டுப்படுத்தும் நோய் உண்டான ஆட்டை மந்தையிலிருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். உடனே, கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மற்ற ஆடுகளுக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக தடுப்பூசி போடுவதன் மூலம், இந்த நோய்களில் இருந்து ஆடுங்களை பாதுகாக்கலாம். துள்ளுமாரி ‘கிளாஸ்டிரீடியம் வெல்சை’ எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் நோய் . இது அனைத்து வயது ஆடுகளையும் தாக்கும். அதிகமாக இளம் ஆடுகளுக்கு வரும்.

    மழைக் காலத்தில் புதிதாக முளைத்த இளம்புற்களை மேயும்போது இந்த நோய் வருகிறது. ஆடுகளின் மேய்ச்சல் நேரத்தைக் குறைத்து, பாதி அளவுக்கு தீவனம் எடுக்கிற மாதிரி செய்ய வேண்டும். உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ஆடுகளுக்கு 6 மாச வயதில் இந்நோய்க்கான தடுப்பூசியைப் போட வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே தடுப்பூசி போட வேண்டும். புதிதாய் முளைத்த புல்லை எப்பவும் மேய விடக்கூடாது. தீவனத்தை திடீரென அதிகப்படுத்தக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத் தான் அதிகரிக்க வேண்டும்.

    ‘புரூசெல்லா மெலிடென்சிஸ்’ என்ற நுண்ணுயிரியால் கருச்சிதைவு நோய் பரவும். இனச்சேர்க்கை மூலமாக பெண் ஆடுகளுக்குப் பரவும். இந்த நோய் தாக்கிய ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை வந்துவிடும். கருச்சிதைவும் ஏற்படும்.

    இந்த நோயின் அறிகுறிகள் தெளிவாத் தெரியாது. கருப்பையிலிருந்து இரத்தம் கலந்த சீழ் வெளியேறும். கிடாய்களுக்குத் தாக்கினால், விரைவீக்கம் இருக்கும். நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளை மந்தையில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இரத்தப் பரிசோதனை செய்து நோய் உறுதியான பிறகு, பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து வெளியேறிய ரத்தம், நச்சுக்கொடி எல்லாத்தையும் அப்புறப்படுத்தி, கொட்டிலை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

    இவ்வாறாக பல நோய்களுக்கு தடுப்பூசி இருந்தாலும், வருமுன் காப்பது தான் மிகச் சிறந்தது. ஆகவே, நோய் வரும் முன்னரே தடுப்பூசி செலுத்தி ஆடுகளை பாதுகாக்க வேண்டும்.

    நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப்பரப்பில் தமிழகம் சாதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....