Sunday, March 17, 2024
மேலும்
  Homeவாழ்வியல்பராமரிப்புவாஷிங் மெஷினை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி?????

  வாஷிங் மெஷினை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி?????

  வாஷிங் மெஷின்கள் உங்கள் வாழ்க்கையை சுலபமாக்கி தொல்லை இல்லாமல் வைக்கின்றன. உங்கள் வீட்டிற்கு வாஷிங் மெஷின் வந்தததிலிருந்து துணி துவைக்கும் வேலை வேகமாகவும் மற்றும் சுலபமாகியும் விட்டது. இருந்தாலும் இந்த சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும்போது இந்த வாஷிங் மெஷின் வழிகாட்டியை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

  இது உங்கள் வாஷிங் மெஷின் நீண்ட காலம் வரை செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் வாஷிங் மெஷினை எப்படி பராமரிக்க வேண்டும் என்று இத்தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

  வாஷிங் மெஷின் வழிகாட்டி..
  • டிடர்ஜெண்ட் போடும் பகுதி நோய் நுன்மங்களுக்கு புகலிடமாக விளங்கும். அந்த பகுதி வாஷிங் பவுடரால் சூழப்பட்டு கட்டியாகி இருக்கும். முடிந்தால் அந்த பகுதியை அப்படியே எடுத்து விட்டு பழைய டூத் பிரஷை கொண்டு சுத்தப்படுத்துங்கள். சாதாரண முறையில் சுத்தப்படுத்தினாலே போதுமானது.
  • வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இப்படி இருந்தால்தான் வாஷிங் மெஷின் துணிகளை நன்கு துவைக்க முடியும்.வாஷிங் மெஷின் அதிகமாக மின்சாரத்தையும் எடுத்துக் கொள்ளாது. இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
  • உங்கள் துணிகளை மெஷினில் போடுவதற்கு முன்பு, எப்போதும் பாக்கெட்டுகளைப் பார்க்கவும். அதில் ஏதேனும் பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். காசுகள், பேனாக்கள் போன்ற பொருள்கள் துவைக்கும் போது மெஷினை சேதமாக்கக்கூடும். அவை நாசூக்கான துணிகளையும் நாசமாக்கலாம்.
  • வடிகட்டி உள்ள இடம் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், அங்கேயும் நோய் நுன்மங்கள் தங்கும். ஆகவே அதனை அடிக்கடி காலி செய்து, உள்ளிருக்கும் அழுக்கை நீக்குங்கள். வாஷிங் மெஷினின் உட்புறம் பார்ப்பதற்கு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது நிஜம் அல்ல. உள்ளே இருக்கும் பல ஓட்டைகள் மற்றும் வெடிப்புகள் மூலமாக, நோய்கள் வேகமாக பரவும். அதனால் மாதத்தில் சில நாட்கள் வெறும் மெஷினை ஓட விடுங்கள்.
  • சோடா உப்பு அல்லது டிஷ் வாஷர் மாத்திரைகளை பயன்படுத்தி, 60 டிகிரி வெப்பத்தை கொண்ட நீரில் மெஷினை ஓட விடுங்கள். இது நோய் கிருமிகளை அழித்து, கெட்ட வாசனையை நீக்கும். மேலும் சோப்பு கறைகள் உண்டாவதையும் தடுக்கும்.துவைத்து முடித்த பின், ட்ரம்மை சுற்றி காற்றோட்டம் இருப்பதற்காக வாஷிங் மெஷினின் கதவை லேசாக திறந்து வையுங்கள். இதனால் நோய் கிருமிகள் வராமல் ட்ரம்மை சுத்தமாக வைத்திருக்கும்.
  • உங்கள் மெஷினில் ப்ரீ வாஷ் செட்டிங் இருந்தால் அதை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதால் துவைக்கதற்கு முன்பு அதிகப்படியான அழுக்கை இது தளர்த்தும். எனவே அதிகப்படியான அழுக்குள்ள துணிகளை மீண்டும் துவைக்கும் அவசியம் இருக்காது.
  •  நீர் வடிவிலான லிக்விட்டை பயன்படுத்துவதற்கு பதில் பவுடரையே பயன்படுத்துங்கள். லிக்விட் வடிவிலான பொருட்களை பயன்படுத்தினால், அவைகள் மெஷினில் படிந்துவிடும். இது கெட்ட வாசனைகள் மற்றும் கறைகளை உண்டாக்கும்.
  • உங்கள் வாஷிங் மெஷின் எவ்வளவு எடை கொண்ட துணியைத் துவைக்குமோ அந்த அளவிற்கு மட்டும் போடவும். கூடதலாகப் போட வேண்டாம்.‌வா‌ஷ‌ி‌ங் மெஷ‌னினை துவை‌க்க‌ப் ப‌ய‌ன்படு‌த்‌திய‌ப் ‌பிறகு ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வெ‌ளியே‌ற்‌றி‌ப் ‌பி‌ன் மே‌ல் பாக‌த்தை சு‌த்தமான து‌ணி கொ‌ண்டு துடை‌‌த்து ஒரு பெ‌ரிய து‌ணியை‌க் கொ‌ண்டு மூடி ‌விடவு‌ம்.

  200 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலா மரம்!!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....