Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இரஷ்ய படைகளுக்கு தனி ஒருவனாய் தண்ணி காட்டிய உக்ரைன் வீரர்!

    இரஷ்ய படைகளுக்கு தனி ஒருவனாய் தண்ணி காட்டிய உக்ரைன் வீரர்!

    உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இரஷ்யா – உக்ரைன் போர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட 40 இரஷ்ய போர் விமானங்களை, தனி ஒருவராக சுட்டு வீழ்த்தி விட்டு, வீர மரணம் அடைந்துள்ளார் உக்ரைன் நாட்டு போர் வீரர். உக்ரைன் – இரஷ்யா இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கியது. 2 மாதங்களைக் கடந்தும் நீடித்து வரும் இப்போரால், உக்ரைனில் உள்ள பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன.

    ‌இருப்பினும், போர் துவங்கிய நாள் முதல், உக்ரைன் படைகளும் இரஷ்யாவுக்கு கடுமையான பதிலடியைத் தருகிறது. இதனால், உக்ரைன் தலைநகரான கீவ்வை, இன்றளவும் இரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

    போர் தொடங்கிய நாள் முதல், இரஷ்ய விமானப் படைகளைத் திணறடித்து வருகிறார் உக்ரைன் போர் விமானி. 6 இரஷ்ய போர் விமானங்களை, முதல் நாள் நடந்த போரிலேயே அவர் சுட்டு வீழ்த்தியுள்ளார். உக்ரைன் விமானப் படை வீரர்களில் மிகத் தீரமானவராகவும், திறமையானவராகவும் அறியப்பட்ட அந்த போர் விமானியின் விவரத்தை உக்ரைன் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என்ற பட்டப்பெயரின் மூலமாகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வந்தார். தற்போது இந்த வீர விமானி மரணத்தை தனதாக்கியுள்ளார்.

    இரஷ்ய விமானப் படைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த அந்த உக்ரைன் வீரரின் பெயர் ஸ்டீபன் டரபால்கா. சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்டீபன் , சிறு வயதில் இருந்தே போர் விமானியாக வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர். அதன்படி, தன்னுடைய 20 வயதில், உக்ரைன் விமானப் படையில் போர் விமானியாக இணைந்து பணியாற்றினார். அவர், சுமார் 18 ஆண்டுகள் அங்கு பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் ராணுவத்தின் உயரிய விருது அவருக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று, கீவ் நகரை கைப்பற்ற, 100க்கும் மேற்பட்ட இரஷ்ய போர் விமானங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்தது. அதிகளவில் போர் விமானங்கள் இல்லாத காரணத்தால் திணறிய உக்ரைன் அரசு, சரணடையும் முடிவுக்கே வந்துவிட்டதாம். அப்போது துணிச்சலாக ஸ்டீபன் , தனி ஒருவனாக இரஷ்ய போர் விமானங்களை, எதிர்த்துப் போரிட்டார். அவர், தனது ‘மிக் – 29’ போர் விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

    இரஷ்ய போர் விமானக் கூட்டத்திற்கு இடையே நுழைந்து, ஸ்டீபன், பம்பரம் போல் சழன்று இரஷ்ய போர் விமானங்களை ஒவ்வொன்றாக சுட்டு வீழ்த்தினார். 40 இரஷ்ய விமானப் படைகளை சுட்டு வீழ்த்தியிருக்கிறார் ஸ்டெபான். பிறகு, இரஷ்ய படைகள் அவருடைய போர் விமானத்தை சுற்றி வளைத்து, சுட்டு வீழ்த்தின. இதில் விமானி ஸ்டீபன் வீர மரணம் அடைந்தார். ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ என அழைக்கப்பட்ட ஸ்டீபன் விவரங்களை, அண்மையில் தான் உக்ரைன் வெளியிட்டது.

    இதையும் படிங்க; இயக்குனர் செல்வராகவன் எழுதிய பாடலா இது? இப்படி அசத்தியிருக்கிறாரே…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....