Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதல தோனி மட்டுமல்ல, மொத்த அணியுமே கம்பேக்தான் : புதிதாய் எழுகிறது மஞ்சள் படை !

    தல தோனி மட்டுமல்ல, மொத்த அணியுமே கம்பேக்தான் : புதிதாய் எழுகிறது மஞ்சள் படை !

    ஐபிஎல் 2022 தொடரின் 46வது ஆட்டத்தில், நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. 

    ஆட்டத்தில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார். மீண்டும் மஹேந்திர சிங் தோனி கேப்டனாக களமிறங்கியதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை அணியில் மாற்றமாக டெவோன் கான்வேவும், சிம்ரன்ஜித் சிங்கும் புதிதாக களமிறங்கினார். டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 

    சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வாயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். இதுவரை வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது பேட்டின் மூலம் பதில் சொல்ல ஆரம்பித்தார் ருதுராஜ் கெய்க்வாட். மறுபுறம் டெவான் கான்வாய் நன்கு ஒத்துழைத்து ஆட சென்னை அணியின் ஸ்கோர் ஓவருக்கு 10 ரன் என்ற விகிதாசாரத்தில் எகிற ஆரம்பித்தது. ஹைதராபாத் அணியின் இளம் நட்சத்திரம் உம்ரான் மாலிக் ஓவரையே, பதம் பார்த்த இடத்தில்தான் சென்னை அணியின் புதுஃபார்ம் வெளிப்பட்டது.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், 99 ரன்களில் கேட்ச் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். மறுபுறம், டெவான் கான்வாய் பொறுப்பை கையில் எடுத்து சென்னை அணியின் ஸ்கோரை 202 ஆக மாற்றி கொடுத்தார். ஹைதராபாத் தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    203 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மாவும், கேன் வில்லியம்சனும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். நல்ல அடித்தளம் அமைத்து கொண்டிருந்த அந்த அணிக்கு முகேஷ் சவுத்ரி வேட்டு வைத்தார்.

    6வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதியை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்பு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. கடைசி நிமிடங்களில் தம் கட்டி அடித்து நிகோலஸ் பூரான் 64 ரன்களை குவித்தும், எந்த பயனும் இல்லாமல் போனது. 

    சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் மற்றும் டுவைன் பிரெடோரியஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சில சிங்கங்களின் புதுவரவு சென்னை அணியை உயர்த்தி பிடித்துள்ள நிலையில், வீறுநடை தொடருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 99 ரன்கள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது வென்றார். 

    அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....