Friday, March 15, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்திடீரென முடங்கிய வாட்ஸ் அப்..! மீண்டும் செயல்படத் தொடங்கியது எப்படி?

    திடீரென முடங்கிய வாட்ஸ் அப்..! மீண்டும் செயல்படத் தொடங்கியது எப்படி?

    இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.
    இந்தியாவில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு இந்த நிலையே நீடித்தது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது.
    இதனால் ‘Whatsappdown’ என்ற ஹாஷ்டேக் முலம் ட்விட்டர், முகநூல் போன்ற பிற சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தன. வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும், வாட்ஸ்ஆப் அழைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணமிருந்தன.
    இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா பதிலளித்தது. அதன்படி, தொழில்நுட்பக் குழுவினர் சோதனை செய்து வருவதாகவும், 24 மணிநேரத்தில் வாட்ஸ்ஆப் சேவை மீண்டும் சீராக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
    ஆனால், பெரும்பாலான பகுதிகளில் வாட்ஸ்ஆப் தற்போது இயல்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    மேலும, வாட்ஸ்ஆப் நிறுவன தரவுகளின்படி, மும்பை , தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னௌ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிக அளவாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....