Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'அந்த கடைசி 3 ஓவர்கள்': பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை., மாஸான சுவாரஷ்ய...

    ‘அந்த கடைசி 3 ஓவர்கள்’: பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை., மாஸான சுவாரஷ்ய பதிவு…

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களை திரும்பப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடியதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குக்கும் இடையே கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆட்டமானது கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றே கூற வேண்டும். வெறுமனே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆலுடன் கண்டுகளித்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்தியாவின் இந்த வெற்றியானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எமொஷனலாக்கியது என்றே கூற வேண்டும். மேலும், சாமனியன் முதல் கிரிக்கெட் ஜாம்பவான் வரை அனைவருமே இந்தியாவின் வெற்றியை பாராட்டி பேசினர். ட்விட்டரில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.

    இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    “தீபாவளி வாழ்த்துகள்! நான் கடைசி 3 ஓவர்களை இன்று திரும்பப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடினேன். என்னவொரு ஆட்டம்!” என்று சுந்தர் பிச்சை பதிவு செய்திருந்தார்.

    இந்தப் பதிவின் கீழ், “முதல் மூன்று ஓவர்களை நீங்கள் பார்க்க வேண்டும்” என ஒருவர் கெமென்ட் செய்துள்ளார்.

    இதற்கு, “அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் எவ்வளவு சிறப்பாகப் பந்துவீசினர்..” என சுந்தர் பிச்சை பதிலளித்தார்.

    பாகிஸ்தான் வீசிய முதல் மூன்று ஓவர்களில் இந்திய வீரர்கள் திணறியதைக் குறிப்பிட்டு கேலி செய்யும் வகையில் பதிவிட்ட அவருக்கு, சுந்தர் பிச்சை பதிலடி தந்துள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: அடுத்த பெரிய கிரகணம் எது? அது இந்தியாவில் எப்போது நிகழும்? வெளிவந்த ஆச்சர்யமான தகவல்கள்…

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....