Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமீண்டெழுமா ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கையுடன் மோதல்

    மீண்டெழுமா ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கையுடன் மோதல்

    டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான குரூப் 1-ல் சூப்பர் 12-வது சுற்று ஆட்டம் பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. 

    டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திலும் தோல்வி அடைந்தது. இதனால் அரை இறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. 

    இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

    இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பௌலிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இலங்கை அணிக்கு 15 ஓவர் முடிவில் 106/4 என்று அக்கணக்கில் இலங்கை அணி விளையாடி வருகிறது. பத்தும் நிசங்க 40 (45), குசல் மெண்டிஸ் 5(6), தனஞ்சய டீ சில்வா 26(23), பானுக ராஜபக்சே7(5) ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில், தற்போது அசலங்கா மற்றும் ஷனாக்க ஆகியோர் விளையாடி வருகின்றனர்.  

    ஆஸ்திரேலிய அணியில் பட் கும்மின்ஸ், மிச்சேல் ஸ்டார்க், அஸ்டோன் அகர், கிளென் மாக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

    இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக ஓடிய விமானம்! நூலிழையில் உயிர் தப்பிய 173 பயணிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....