Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தீபாவளி பண்டிகை விடுமுறை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் நாளை எந்த பணிகளும் நடைபெறாது

    தீபாவளி பண்டிகை விடுமுறை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் நாளை எந்த பணிகளும் நடைபெறாது

    கோயம்பேடு சந்தை இன்று செயல்படாது என கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பறிமாறியும் சிறப்பாக கொண்டாடினர். தீபாவளியைக் கொண்டாட தொழிலாளர்கள், பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

    இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த பலரும் கூட தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

    இதனால், இன்று கோயம்பேடு சந்தை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

    மேலும், லாரி ஓட்டுநர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் தீபாவளி விடுமுறையில் சென்றுள்ளதால் நாளை(அக்டோபேர் 26) கோயம்பேடு சந்தையில் எந்தப் பணிகளும் நடைபெறாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் கரையை கடந்த ‘சிட்ரங்’ புயல்; 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்த அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....