Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபதற்றத்தில் கோவை.. கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியால் வந்த துணை ராணுவம்; 5 பேர் கைது

    பதற்றத்தில் கோவை.. கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியால் வந்த துணை ராணுவம்; 5 பேர் கைது

    கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    ஜமேஷா முபீன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உக்கடம் டவுன் ஹால் மற்றும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டம், டவுன் ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்று இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். 

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராவில் பதிவாகியுள்ளது. 

    அந்தச் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

    இதனிடையே, ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குடனுகள், இரண்டு சிலிண்டர்கள் ஆகியவை தடயங்களாக கிடைத்தன. 

    முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) உந்த இரண்டு பேரும் உக்கட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல், முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26). இந்த மூன்று பேரும் உக்கடம் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    இதையும் படிங்க: தீபாவளியன்று 280 தீ விபத்துகள்; சென்னையில் மட்டும் 180 இடங்களில் நடந்த பயங்கர நிகழ்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....