Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளியன்று 280 தீ விபத்துகள்; சென்னையில் மட்டும் 180 இடங்களில் நடந்த பயங்கர நிகழ்வு

    தீபாவளியன்று 280 தீ விபத்துகள்; சென்னையில் மட்டும் 180 இடங்களில் நடந்த பயங்கர நிகழ்வு

    தமிழகம் முழுவதும் தீபாவளியான நேற்று 280 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால், 280 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

    சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கீழ்கட்டளையில் ஹார்ட்வர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து, அசோக் நகரில் மருந்து குடோன் தீ விபத்து, எண்ணூர் கார்கில் நகரில் ஏற்பட்ட தீ விபத்து என மூன்று பெரிய அளவில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மற்ற இடங்களில் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தீ விபத்துகளால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்சேதங்களும் குறைவு என கூறப்படுகிறது. 

    மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் புற நோயாளியாக சிகிச்சை பெற்று சென்றதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஒரு சிலர் உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய 10 பேர் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் மட்டுமே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தீபாவளி தினத்தன்று நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக, சென்னையில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க:அடுத்த பெரிய கிரகணம் எது? அது இந்தியாவில் எப்போது நிகழும்? வெளிவந்த ஆச்சர்யமான தகவல்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....