Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவங்கதேசத்தில் கரையை கடந்த 'சிட்ரங்' புயல்; 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுத்த அரசு

    வங்கதேசத்தில் கரையை கடந்த ‘சிட்ரங்’ புயல்; 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்த அரசு

    வங்க தேசத்தில் சின்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகே இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்கு இடையே சிட்ரங் புயல் கரையை கடந்தது.

    வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் நேற்றிரவு வங்க தேசத்தில் கரையைக் கடந்தது. 

    இந்தப் புயல் மேலும் வலுவிழந்து வடகிழக்கு மாநிலங்களில் காற்றழுத்த தழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 

    மேற்கு வங்க அரசு இந்தப் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

    பாக்களை கடல் கடற்கரையில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்கரைக்கு செல்ல டதை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று, “சிட்ரங் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியே வருவதையும் கடற்பகுதிக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்” என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  

    சிட்ரங் புயலின் தாக்கத்தினால், அசாம், மேகலாயா, மிசோரம் மற்றும் திரிபுர ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு மோரா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோவை தூய்மை பணியாளர்கள்: ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....