Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

    சென்னை: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    25.10.2022 26.10.2022: 

    தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை), டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை), நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

    சென்னையைப் பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும்இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுறளகோடு பகுதியில் 7 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக ஓடிய விமானம்! நூலிழையில் உயிர் தப்பிய 173 பயணிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....