Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மனைவியை உயிருடன் புதைத்த கொடூரன்! கடவுள் போல் அலர்ட் கொடுத்து காப்பாற்றிய 'ஆப்பிள் வாட்ச்'

    மனைவியை உயிருடன் புதைத்த கொடூரன்! கடவுள் போல் அலர்ட் கொடுத்து காப்பாற்றிய ‘ஆப்பிள் வாட்ச்’

    அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு நபர் தனது மனைவியை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு நபர் தனது மனைவியைக் கொல்ல முயற்சித்து, மனைவியின் கை, கால்களை கட்டி உயிருடன் மண்ணில் புதைத்துள்ளார். வாஷிங்டனை சேர்ந்த 42 வயதான யங் சூக் என்ற நபருக்கும், அவரது 53 வயது கணவர் சாய் கியோங் என்பவருக்கும் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இவர்கள் இருவரும் தனித்தனியே வசித்து வருவதன் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

    இதனிடையே, அக்டோபர் 16 ஆம் தேதி, யங் சூக்கின் கணவர் சாய் கியோங் அவரது வீட்டிற்கு வந்து அவரைக் கடத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். சாய் கியோங் தனது மனைவியை முதலில் தாக்கி, பின்னர் அவரது கைகளையும் கால்களையும் கட்டி அவரை காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றார்.

    பிறகு அங்கு ஒரு குழியைத் தோண்டி, அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடிவிட்டார். மயக்க நிலையில் கிடந்த மனைவி சிறிது நேரத்தில் விழித்துக்கொண்ட பின், எப்படியாவது தான் சுவாசிக்க வேண்டும் என்று கல்லறையிலிருக்கும் மண்ணை முடிந்த அளவு தள்ளியிருக்கிறார். 

    மேலும், அவர் தனது கையிலிருந்த ஆப்பிள் வாட்சிலிருந்து உதவி கோரி, தனது மகளுக்கும் காவல்துறைக்கும் தகவல் அனுப்பினார். கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது, அவர் தனது ஆப்பிள் கைக்கடிகாரத்திலிருந்து காவல்துறையின் அவசர எண்ணை டயல் செய்துள்ளார். 

    அதைப் பார்த்த அவரது கணவர் அந்த ஆப்பிள் வாட்சையும் அடித்துசேதப்படுத்தியுள்ளார். சுமார் 3-4 மணி நேரம் கல்லறையில் தான் இருந்ததாக யாங் கூறினார். 

    இதன்பின்னர், எப்படியோ மண்ணைத் தோண்டி புதைகுழியில் இருந்து வெளியே வந்து காட்டில் அலைந்து அங்கிருந்த ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு காவல்துறை குழு அவரை மீட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து அடுத்த நாள், அக்டோபர் 17 அன்று, அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கமீண்டெழுமா ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கையுடன் மோதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....