Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஹிந்தி பட இயக்குநருடன் கை கோர்க்கும் சுந்தர்.சி...!

    ஹிந்தி பட இயக்குநருடன் கை கோர்க்கும் சுந்தர்.சி…!

    இயக்குநர் சுந்தர்.சி தனது அடுத்த படத்துக்காக ஹிந்தி பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழில் மிக முக்கிய இயக்குநராக வலம் வருபவர், சுந்தர்.சி. பல நகைச்சுவை படங்களுக்கு இவர் சொந்தக்காரர். அதே சமயம், அன்பே சிவம் போன்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.

    இவர் தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள காஃபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் சுந்தர்.சி பிஸியாக உள்ளார். இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக நடிக்கும் படம் – அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, பரமபதம் விளையாட்டு பட இயக்குநர் திருஞானம் இயக்கும் இப்படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். அவருடன் ஹிந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யமும் இணைந்து நடிக்கவுள்ளார். ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கிறார். 24 ஹவர்ஸ் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்த இமைக்கா நொடிகள் பெரிய வெற்றியை பதிவு செய்தது இசமயத்தில் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் வெற்றியால், மீண்டும் துவங்கும் ‘சங்கமித்ரா’; முனைப்புடன் சுந்தர்.சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....