Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇவங்களுக்கு தண்ணீர்ல கண்டம் சார்: தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த சோகம்., புள்ளிகளை இழந்த பரிதாபம்

    இவங்களுக்கு தண்ணீர்ல கண்டம் சார்: தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த சோகம்., புள்ளிகளை இழந்த பரிதாபம்

    மழைக்காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது.

    இருபது ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் நேற்றை
    இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆட்டம் நடைபெற்ற ஹோபார்டில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதிகப்படியான நேரம் வீணானதால், இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.

    இதற்கடுத்து, 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர்.

    முதல் பந்திலிருந்தே ருத்ரதா டி காக் வான வேடிக்கை காட்டத் தொடங்கினார். முதல் ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 23 ரன்கள் விளாசினார். இரண்டாவது ஓவரின்போதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 7 ஓவரில் 64 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

    மழைக்குப் பிறகு வீசப்பட்ட 2-வது ஓவரின் மீதமுள்ள 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசினார் டி காக். 3-வது ஓவரை சிக்கந்தர் ராசா சிறப்பாக வீசி பவுண்டரிகள் எதுவும் கொடுக்கவில்லை. எனினும், தென்னாப்பிரிக்க அணி அந்த ஓவரில் 11 ரன்கள் சேர்த்தது.

    ஆனால், தென்னாப்பிரிக்கா விளையாட்டில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு அப்போது 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. எனினும், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இதனால், ஜிம்பாப்வே அணி தோல்வியிலிருந்து தப்பியது. வெறும் 18 பந்துகளில் 47 ரன்கள் விளாசிய டி காக்கின் அதிரடி வீணாய் போனது. இதன்மூலம், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ‘அந்த கடைசி 3 ஓவர்கள்’: பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை., மாஸான சுவாரஷ்ய பதிவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....