Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்பு' எங்க நாட்டுக்கு வாங்க' - உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை அழைத்த ரஷ்யா

    ‘ எங்க நாட்டுக்கு வாங்க’ – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை அழைத்த ரஷ்யா

    உக்ரைன்-ரஷ்ய போரால் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை ரஷ்யா,  ‘தங்களது நாட்டுக்கு வந்து கல்வி பயிலும்படி’ கேட்டுக்கொண்டுள்ளது.

    உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக பல்வேறு படிப்புகளை பயின்று வந்த இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பத்திரமாக நாடு திரும்பியள்ளனர். மாணவர்கள் உயிர்தப்பினாலும் அவர்களின் கல்விநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

    மேலும், மாணவர்களின் கல்விக் கனவு என்ன ஆவது என்ற கேள்விகள் அப்போது இருந்தே எழுப்பப்பட்டு வந்தது. மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்தியாவில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர். 

    இந்நிலையில்தான், இந்திய பல்கலைகழகத்தில் தொடர வழிவகை செய்யும் முறைக்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. 

    இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ன செய்வதென்று புரியாமல் இருந்துவந்தனர். இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியாவில் மருத்துவக் கல்வி ஒன்றுதான் என்பதால், இந்திய மருத்துவ மாணவர்கள், உக்ரைனில் விட்ட மருத்துவக் கல்வியை தங்கள் நாட்டில் வந்து தொடர வசதி செய்யப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

    மேலும்,இந்தியாவுக்கான ரஷிய தூதர் ஒலேக் அவ்தீவ் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று, பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள், ரஷியாவிலும் ஒரே மாதிரியான மருத்துவக் கல்விதான் வழங்கப்படுகிறது என்பதால், தங்கள் நாட்டில் கல்வியைத் தொடரலாம். அவர்களுக்கு மக்கள் பேசும் மொழியும் தெரிந்திருக்கும், ஏனென்றால், உக்ரைனிலும் பெரும்பாலான மக்கள் ரஷிய மொழியைத்தான் பேசுவார்கள். ரஷியாவுக்கு இந்திய மருத்துவக் கல்வி மாணவர்களை அன்புடன் வரவேற்கிறோம் 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பொது மக்கள் மத்தியில் 2 கி.மீ தூரம் நடந்தே சென்ற குடியரசு தலைவர் ! ஏன் தெரியுமா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....