Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அடாத மழையிலும் மிதக்கதா சென்னை: பட்டியலிடும் அமைச்சர் கே என் நேரு

    அடாத மழையிலும் மிதக்கதா சென்னை: பட்டியலிடும் அமைச்சர் கே என் நேரு

    பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே என் நேரு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு செய்த பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி.

    மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
    நேற்று இரவு முதல் இன்று காலை எட்டு முப்பது மணி வரை 64.5 மிமீ மழை பெய்துள்ளது.
    மழையின் காரணமாக தற்போது வரை விழுந்த 92 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து 16 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்க வில்லை.
    கொளத்தூர் பகுதியில் மட்டும் 82 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.பட்டாளம் பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது பாலம் கட்டுமான பணி முடிந்தால் இனி எப்போதும் பட்டாளம் பகுதியில் மழை நீர் நிற்காது.

    இன்றைய மழையில் புளியந்தோப்பு பட்டாளம், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்க வில்லை. மோட்டார் பம்புகளை பொருத்தி துரிதமாக மழை நீரை வெளியேற்றி வருவதே இதற்கு காரணம்.

    தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தற்போதைய சூழலில் அறிவுறுத்தல் தான் கொடுக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணி தாமதம் ஆகிவிடும்.மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா சாலை மற்றும் டேம்ஸ் சாலை சந்திப்பு மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு மழைநீர் வடிகால் இணையும் இடத்தில் மழைநீர் வெளியேறுவதையும் அமைச்சர் திரு.கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையும் படிங்கவருகின்ற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும்..! சென்னை வானிலை மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....