Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஊராட்சித் துறையில் ரூ.71,000-த்திற்கு வேலை; விண்ணப்பிக்க முந்துங்கள்!

    ஊராட்சித் துறையில் ரூ.71,000-த்திற்கு வேலை; விண்ணப்பிக்க முந்துங்கள்!

    ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, காலியாக உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக  ரூ.19.500 – ரூ.71,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரையில், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    இப்பணிக்கு தகுதியானோர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அனுக வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 11.2.2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து மேலும் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf என்ற லிங்கை அனுகவும். 

    ஆளுநர் மாளிகை குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....