Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபொது மக்கள் மத்தியில் 2 கி.மீ தூரம் நடந்தே சென்ற குடியரசு தலைவர் ! ஏன்...

    பொது மக்கள் மத்தியில் 2 கி.மீ தூரம் நடந்தே சென்ற குடியரசு தலைவர் ! ஏன் தெரியுமா ?

    ஒடிசாவிற்கு இரண்டு நாள் பயணமாகசென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஜெகநாதர் கோவிலுக்கு சென்றுவிட்டு, இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று வியாழக்கிழமயன்று ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றார்.

    இது தொடர்பான காணொளி குடியரசுத் தலைவர் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவர் முர்மு, பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மகாபிரசாத்தையும் பெற்றார்.

    மேலும், கோவிலுக்கு குடியரசு தலைவருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் சென்று தரிசனம் செய்தார்.

    குடியரசு தலைவர் முர்மு சுற்றுப்பயணத்தையொட்டி, பூரி மற்றும் புவனேஸ்வரில் நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    குடியரசு தலைவர் வருகையையொட்டி, ஒடிசா மாநில தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்கஇங்கிலாந்தில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி..தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை விளக்கும் நிகழ்வுகள் பங்கேற்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....