Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு வேலை...இங்கேதான் நேர்முகத்தேர்வாம்...

    கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு வேலை…இங்கேதான் நேர்முகத்தேர்வாம்…

    கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு இந்திய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், கத்தார் டூட்டி ஃப்ரீ, கத்தார் ஏவியேஷன் சேவைகள், கத்தார் ஏர்வேஸ் கேட்டரிங் நிறுவனம், கத்தார் விநியோக நிறுவனம் போன்றவற்றில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விரைவில் வெளியிடும் என தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, சமையல், கார்ப்பரேட் மற்றும் வணிகம், மேலாண்மை, சரக்கு, வாடிக்கையாளர் சேவை, பொறியியல், விமான செயல்பாடுகள், தரை சேவைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு டிஜிட்டல், நிர்வாகம், விற்பனை மற்றும் நிதி, போன்ற பல்வேறு பதவிகளுக்கு இந்திய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய பணியாளர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நாளை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர். 16,17) தில்லியிலும் (செப்டம்பர். 29,30) தேதிகளில் மும்பையிலும் நடைபெறும் பணியாளர் தேர்வு முகாமில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இது குறித்த விவரங்கள் அறிய https://qatarairways.com/recruitment என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....