Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட நிலம் - இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

    அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட நிலம் – இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

    திராவிட முன்னேற்ற கழக அரசு தொடக்கம் முதலே சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு,

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜையின்போதும் ருத்திர ஜெப ஊழியம் செய்வதற்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜைக்கும் தயிர் வழங்குவதற்காகவும் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம்
    திரு தட்சிணாமூர்த்தி அய்யர் மற்றும் முக்கோனார் ஆகியோருக்கு 55 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வழி கேட்டது ஒரு குத்தம்மா? கிராம மக்களால் தாக்கப்பட்ட சாமியார்கள்

    தற்போது அந்த இடமானது வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டு விட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்து நீதிமன்றத்தின் வாயிலாக மீட்கப்பட்டது.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதற்கான பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....