Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவழி கேட்டது ஒரு குத்தம்மா? கிராம மக்களால் தாக்கப்பட்ட சாமியார்கள்

    வழி கேட்டது ஒரு குத்தம்மா? கிராம மக்களால் தாக்கப்பட்ட சாமியார்கள்

    மராட்டிய மாநிலத்தில் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என தவறுதலாக நினைத்து 4 சாமியார்களை கிராமத்தை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். 

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 சாமியார்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி செல்கையில் இவர்கள் கர்நாடகவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    அதைத்தொடர்ந்து, அவர்கள் மராட்டிய மாநிலத்தில் சங்கிலி மாவட்டத்துக்கு சென்ற போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். அந்த சமயத்தில், பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என நினைத்த கிராம மக்கள் சாமியார்களை அடித்து உதைத்து அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில், சாமியார்களை தாக்கிய காணொளி வெளிவந்துள்ளதால், இதை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....