Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்; வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

    இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்; வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

    இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி 25-ல் முடிவடைகிறது. இந்தத் தொடரின் போட்டிகளானது மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

    இந்நிலையில், இந்த இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்களுக்குச் சிறு காயங்கள் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விராட் கோலியை சீண்டிய அப்ரிடி .. கண்டனங்களை பதிவிடும் ரசிகர்கள்!

    மேலும், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ், ஷான் அபாட் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் கேம்ரூன் க்ரீன், அறிமுக வீரர் டிம் டேவிட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

    முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி:

    ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேம்ரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஷ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஸாம்பா.

    இந்திய அணி:

    ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார், முகமது ஷமி.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....