Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபொய் பேசும் ராஜ தந்திரி.,சந்தர்ப்பவாதி ஓபிஎஸ் தான்..! காட்டமாக விமர்சித்த அன்பழகன்

    பொய் பேசும் ராஜ தந்திரி.,சந்தர்ப்பவாதி ஓபிஎஸ் தான்..! காட்டமாக விமர்சித்த அன்பழகன்

    புதுச்சேரி: நேரத்திற்கு தகுந்தார்போல் பொய் பேசும் ராஜ தந்திரியான ஓபிஎஸ் தான் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி என்பதை மனதில் கொண்டு எடப்பாடியாரை விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    திமுகவின் பி டீமாக செயல்பட்டு கழகத்தை அழித்து ஒழிக்க நினைக்கும் ஓபிஎஸ்சின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும், அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறுவது தமாஷாக உள்ளது என்றும், நேரத்திற்கு தகுந்தார்போல் பொய் பேசும் ராஜ தந்திரியான திரு ஓபிஎஸ் தான் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி என்பதை மனதில் கொண்டு எடப்பாடியாரை விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: டி20 உலக கோப்பை; இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறப் போவது யார்?

    பொறுப்புமிக்க பதவிகளான துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகிய பதவிகளில் உள்ளவர்களை விமர்சனம் செய்யும் போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு நாவடக்கம் தேவை என்றும், தமிழ் மகளான நம் துணைநிலை ஆளுநரை தெலுங்கானாவில் மக்கள் துரத்தியடிப்பார்கள் என்றும், பெயருக்கு தான் என்.ஆர் அவர்கள் முதலமைச்சர் என்றும், அவர் போட்டிருக்கும் சட்டை பாஜகவினருடையது என்று பேசுவது நாகரிகமற்ற செயலாகும்.

    தனது ஆட்சியின் போது அரசின் அதிகாரங்களை தனது கையாலாகாத தனத்தினால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ஒப்படைத்த நாராயணசாமி இன்று நமது துணைநிலை ஆளுநரை எதிர்த்து வீர வசனம் பேசுகிறார் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் என்.ஆர். அணியும் சட்டை பாஜகவினருடையது என்றால் இவர் முதலமைச்சராக இருந்த போது இவரது வேட்டி திமுகவினருடையது என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறாரா? மக்களுக்கு தேவையான பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக பேசுவதை விட்டுவிட்டு துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் நிழல் பிம்பத்தை ஆராய்வதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் முற்படுத்தப்பட்ட ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்க 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஏற்கனவே இடஒதுக்கீட்டில் பயன்பெறும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., தவிர்த்து முற்படுத்தப்பட்ட பிரிவினரில் எந்தெந்த ஜாதியில் உள்ளனர் என்பதை வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு தெரியும் விதத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என கூறிய அன்பழகன், புதுச்சேரியில் இயங்க கூடிய பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மாணவர்களை கடந்த 6 மாதமாக அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

    இதனால் மாணவர்கள் உயர்கல்விக்கோ, வேலைவாயப்புக்கோ செல்லமுடியாத சூழல் உள்ளது. எனவே முதலமைச்சர் இதில் தலையிட்டு மாணவர்களுக்கு ஓரிரு தினங்களில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதிமுக சார்பில் தலைமை கழகத்தின் அனுமதி பெற்று மாணவர்கள் நலன் கருதி பொறியியல் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: திருப்பூர் தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; 2 நபர்கள் அதிரடி கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....