Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆசிரியர் தகுதி தேர்வுக்கு வந்த சன்னி லியோன்! ஹால் டிக்கெட்டை பார்த்து அதிர்ந்து போன மாணவி

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வந்த சன்னி லியோன்! ஹால் டிக்கெட்டை பார்த்து அதிர்ந்து போன மாணவி

    ஆசிரியர் தகுதி தேர்வில் ஹால்டிக்கட்டில் விண்ணப்பித்தவரின் புகைப்படத்திற்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் புகைப்படம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் கூடிய விரைவில் நடத்த உள்ளது. இதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். 

    இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு அறை நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

    அப்படி அனுப்பிவைக்கப்பட்ட ஹால்டிக்கெட் ஒன்றில் பெண் விண்ணப்பதாரரின் புகைப்படத்திற்கு பதில், பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆசிரியர் தேர்வு வாரிய பணியாளர்களின் கவனக் குறைவு காரணமாக நிகழ்ந்த இந்த தவறு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

    இதையும் படிங்கநடுரோட்டில் கண்டெய்னர் லாரியில் வந்த விமானம்! அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....