Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநடுரோட்டில் கண்டெய்னர் லாரியில் வந்த விமானம்! அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொதுமக்கள்

    நடுரோட்டில் கண்டெய்னர் லாரியில் வந்த விமானம்! அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொதுமக்கள்

    கேரளாவில் கண்டெய்னர் லாரியில் எடுத்து செல்லப்படுகிற விமானத்தை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

    ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்றின் பணிக்காலம் முடிந்தது. அப்படி பணிக்காலம் முடியும் விமானங்களை ஏலத்தில் விடப்படுவது வழக்கம். அப்படி ஒரு விமானத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். மேலும் அதை அவர் உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து இந்த விமானம் தற்போது கண்டெய்னர் லாரி மூலம் ஆந்திர மாநிலம் ஹைதிராபாத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கொண்டு செல்லப்படும் இந்த விமானத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு, அதை புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். 

    என்னதான் தொலைக்காட்சி மூலமும் செல்போனின் வாயிலாகவும்  பார்த்திருந்தாலும், மக்கள் மிக அருகில் விமானத்தை பார்ப்பதற்கு புதிவிதமாக இருப்பதாக கூறுகின்றனர். 

    விமானத்தை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும். மேலும் ஹைதிராபாத் சென்றடைய 20 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. காரணம் கனரக வாகனம் என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்படும்.

    இதையும் படிங்க: ‘பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை!’ – மேத்யூ ஹைடன் சூசக எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....