Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

    தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது.அதன் முதல் கட்டமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை சென்னையில் இன்று வெளியிட்டு, டிசம்பர் 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர் எனவும் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகத்திலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதனையொட்டி சென்னை மயிலாப்பூரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வாக்களிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து, பின்னர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதையும் படிங்க: மதுரையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

    பின்னர் செய்தியாளிடம் பேசிய அவர்,

    இன்று முதல் அடுத்த மாதம் 8-12-2022 வரை இந்த ஒரு மாதத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் சேர்ப்பது நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்து கொள்ளலாம். இதற்காக படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவை வாக்காளர் முகாம் அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் ஆன்லைன் மூலமும், Voters helper ஆப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.

    தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
    குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதுவரை படிவம் 16 மூலம் 56.09% வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். சென்னையில் 20 % வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆண்டிற்கு நான்கு மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி, ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஜூலை ஒன்றாம் தேதி, அக்டோபர் ஒன்றாம் தேதி ஆகிய தினங்களில் 17 வயது முடிந்து 18 வயது தொடங்கும் நபர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மறைவு காரணமாக 2.44 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் பதிவு செய்த 15.25 லட்சம் நபர்களின் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....