Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் புதிய வாக்காளர்களை சேர்க்க அதிகாரிகள் நியமனம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன்

    புதுச்சேரியில் புதிய வாக்காளர்களை சேர்க்க அதிகாரிகள் நியமனம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன்

    புதுச்சேரியில் டிசம்பர் 8-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது என்றும், புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டார். இதில் புதுச்சேரியில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 963 பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 322 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 116 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் வல்லவன், தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இந்த முறை சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளது என்றும், அதன்படி 1-10-23 அன்று 18 வயது நிரம்ப உள்ளவர்கள் தங்களது பெயர்களையும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

    மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளலாம் என கேட்டுக்கொண்ட ஆட்சியர் வல்லவன், வீடு வீடாக சென்று புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

    மேலும் புதிய வாக்காளர்களை சேர்க்க பிரத்தியோக வாக்கு பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதுச்சேரி கிராம மற்றும் நகரப்புறங்களில் உள்ள 29 சதவீத வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை இதுவரை இணைக்கவில்லை என்றும், ஆதார் என்னோடு கைபேசி எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கூறிய அவர், புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், புதுச்சேரியில் உள்ள மூன்றாம் பாலினம் மற்றும் நரிக்குறவர் இனத்தவர்களை சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் புது சரணாலயம்; எங்கே தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....