Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் 11 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

    கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இந்தக் காய்ச்சல் காரணமாக 3 முதல் 5 நாட்கள் வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை கட்டுக்குள் கொண்டுவர பல மாநில அரசுகளும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

    இதனிடையே தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரிசோதனைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

    அதே சமயம், புதுச்சேரி மாநிலத்திலும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. இதன் காரணமாக அங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த 16 ஆம் தேதி முதல் நேற்று 26 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கு இந்த அறிவிப்பினை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது இன்று முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    பொன்னியின் செல்வன்; வெளிவந்த முக்கிய அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....