Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெறும் ரூ.7000-த்தை வைத்து சிலை கடத்தல் மன்னன் போட்ட மாஸ்டர் பிளான்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

    வெறும் ரூ.7000-த்தை வைத்து சிலை கடத்தல் மன்னன் போட்ட மாஸ்டர் பிளான்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

    வெளிநாடுகளில் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக சிலை கடத்தல் வழக்கில் விதிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை சுபாஷ் கபூர் செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    சர்வதேச அளவில் சிலை கடத்தி, அவற்றை பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் சுபாஷ் கபூர் கடந்த 2011 ஆம் ஆண்டு கைது செய்து தமிழகம் அழைத்து வரப்பட்டார். இவர் மீது இதுவரை 5 சிலை கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இவர் சம்மந்தப்பட்ட வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, வெளிநாடுகளில் இவரைப்பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சுபாஷ் கபூரை திருப்பி அனுப்புமாறு ஜெர்மன் அரசு கடிதம் அனுப்பியது. 

    மேலும் சுபாஷ் ஜெர்மன் குடியுரிமையை பெற்றவர். இவர் தமிழக சிறையில் வைத்து விசாரணை நடத்தகுவதற்கான அனுமதியை ஜெர்மன் அரசு ரத்து செய்தது. இதற்கு தமிழக காவல்துறை தரப்பில், இவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் இறுதி கட்ட விசாரணையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    சித்தமல்லி கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் 7 ஆயிரம் ரூபாய் அபராததையும் விதித்தது. 

    இதனிடையே, சுபாஷ் கபூர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறையில் இருப்பதால், ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

    இன்னும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் இந்த நிலையில், ஜெர்மன் அரசு அவரை அங்கு அனுப்ப கேட்டிருப்பதால், சுபாஷ் கபூரை ஜெர்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என சிறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், சிலை கடத்தலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சுபாஷ் கபூர், வெளிநாடுகளில் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக வேண்டும் என்றே தண்டனையுடன் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை இன்னும் செலுத்தாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்கடிரம்ப் கட்சிக்கு வாக்களியுங்கள்! எலான் மஸ்க்கின் அடுத்த சர்ச்சை… கடுப்பில் ஜோ பைடன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....