Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை!' - மேத்யூ ஹைடன் சூசக எச்சரிக்கை

    ‘பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை!’ – மேத்யூ ஹைடன் சூசக எச்சரிக்கை

    நாம் தீவிரமாக விளையாடும்போது, அச்சுறுத்தும் அணியாக நாம் மாறுவோம் என பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் கால்பதிக்கும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு பிரகாசமானது. மேலும், பாகிஸ்தான் அணி தனது கடைசி சூப்பர் 12 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியதால் அரையிறுதிக்குள் முன்னேறியது. 

    இந்நிலையில், இன்று அரையிறுதியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

    இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    நாம் அரையிறுதிக்கு முன்னேறியது அதிசயம். ஆனால், முன்னேறவிட்டோம். ஆதலால் நமக்கு தற்போது ஒரு ஆற்றல் கிடைத்துள்ளது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தவில்லை என்றால் நாம் இங்கு இல்லை. தற்போது, நாமிருக்கும் இடம் வலுவானது. ஏனென்றால், நம்மை அரையிறுதியில் பார்க்க யாரும் விரும்பவில்லை. இதுதான் நமக்கு சாதகம்.

    பிற அணிகள் நம்மை அகற்றிவிட்டதாக நினைத்தார்கள் ஆனால் அப்படியில்லை. நாம் மிகவும் அபாயகரமான வீரர்கள். நாம் தீவிரமாக விளையாடும்போது, அச்சுறுத்தும் அணியாக நாம் மாறுவோம். இப்போது, நம்மை எதிர்கொள்ள விரும்பும் எந்த ஒரு அணியும் இந்த உலகத்தில் இல்லை. இந்த தொடரில் இல்லை.

    மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஆட்டத்தில் விளையாடினாலும் சுதந்திரமாக, புத்துணர்ச்சியாக இருங்கள். நேர்மறையாகவும், அச்சமில்லாமலும், எவரும் மறக்கவே முடியாதபடியான ஆட்டத்தை விளையாடுங்கள்.

    இவ்வாறு மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பையை வெல்லப்போவது ‘இந்தியா’ தான்! ஏபிடிவில்லியர்ஸ் நம்பிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....