Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்செயற்கைக் கோளின் துணை கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளைக் கண்டறிய புதிய முயற்சி!!

    செயற்கைக் கோளின் துணை கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளைக் கண்டறிய புதிய முயற்சி!!

    ஆஸ்திரேலியாவினை மையமாகக் கொண்ட மிண்டெரோ என்கிற நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை கோள்களின் துணை கொண்டு உலகில் குப்பைகள் மிகுந்துள்ள பகுதிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்த முறைக்கு ‘குளோபல் பிளாஸ்டிக் வாட்ச்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் பிளாஸ்டிக் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றினைத் தடுக்க முடியும் என்று அத்தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

    இந்த உலகமானது மனிதர்களினால் பலவிதமான இக்கட்டுகளைச் சந்தித்து வருகின்றது. காடுகளை அழித்தல், அக்காடுகளை அழித்த பகுதிகளில் விவசாயம் செய்தல், பல உயிரினங்களை அழித்தல்/அழிவின் விளிம்பு நிலைக்கு கொண்டு செல்லுதல் என மனிதர்கள் இந்த உலகிற்குச் செய்த குற்றங்களின் பட்டியல் இன்று வரை நீண்டு கொண்டே தான் போகிறது. 

    தொழில்நுட்ப வளர்ச்சி 

    அதிக அளவு தொழில்நுட்ப வளர்ச்சியாலும், புதுப் புது கண்டுபிடிப்புகளாலும் இந்த உலகம் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் அதிகமான பேசு பொருளாக மாறியுள்ள விடயங்களில் மிக முக்கியமானது உலக வெப்பமயமாதல் மற்றும் பிளாஸ்டிக் என்று கூறினால் அது மிகையாகாது.

    1862ம் ஆண்டு அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவர்  கண்டறிந்த ‘பர்கெஸின்’ என்ற பெயர் கொண்ட பிளாஸ்டிக் என்னும் பொருள் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஒட்டிக்கொண்டுள்ளது. பிளாஸ்டிக்கின் வருகை பல விடயங்களில் நமது வேலையினை சுலபமாக்கியுள்ளது. 

    நாளுக்கு நாள் அவற்றின் தேவைகள் ஓவ்வொரு துறைக்கும் தேவைப்படவே பிளாஸ்டிக்கின் உற்பத்தி பலமடங்கு பெருகத்தொடங்கியது. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் 8.3 பில்லியன் டன் என்கிற அளவினை நெருங்கியுள்ளது.

    இந்த அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது, 12 சதவீதம் பிளாஸ்டி எரிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 79 சதவீத பிளாஸ்டிக்குகளும் இந்த உலகில் ‘குப்பைகள்’ என்ற பெயரில் நிலத்தின் மீதும், நீர் நிலைகளின் மீதும் விரவிக் கிடக்கின்றன என்பது கவலைக்குரிய விடயம். 

    இந்த அளவுக்குப் பல்கிப் பெருகியுள்ள பிளாஸ்டிக்கின் உற்பத்தியினைக் குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் பல யுத்திகளைக் கையாண்டு வருகின்றன. பல நாடுகள் தங்களது நாடுகளில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்குகளை அதிக அளவு மறுசுழற்சி செய்யும் முயற்சியில் உள்ளன.

    வளர்ந்த நாடுகளோ, தங்களது நாட்டில் உருவாகியுள்ள குப்பைகளை வளரும் நாடுகளின் தலையில் கட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்று, கடல்களில் பிளாஸ்டிக்கினைக் கொட்டும் நிலை வந்துள்ளது. இவ்வாறு கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக்குகள் இன்று பிளாஸ்டிக் தீவுகளை உருவாகியுள்ளது என்பது மற்றொரு கவலைக்குரிய விடயம்.

    மைக்ரோ பிளாஸ்டிக்குகள்

    இவ்வாறு கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் பெரும்பாலும் நீர் நிலைகளினால் அடித்துவரப் பட்டவையாகவே உள்ளன. 91 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் இம்முறையிலேயே கடலில் சேருகின்றன.

    கடலில் சேரும் குப்பைகளை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்வதில் மூலம் அவற்றின் உடலில் ‘மைக்ரோபிளாஸ்டிக்’குகள் உருவாகின்றன. அத்தகைய உயிரினங்களை மனிதர்கள் உட்கொள்வதில் மூலம் அந்த ‘மைக்ரோ பிளாஸ்டிக்’க்குகள் நமது உடலிலும் பரவும் அபாயம் உள்ளது.

    இத்தகைய மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனிதர்கள் உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

    தற்போது கண்டறியப்பட்டுள்ள ‘குளோபல் பிளாஸ்டிக் வாட்ச்’ என்கிற தொழில்நுட்பம், இவ்வாறு கடலில் கலக்கும் குப்பைகளைக் கண்டறிய பெரிதும் உதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஐரோப்பிய வானியல் நிறுவனத்தின் துணை கொண்டு செயற்கைகோள்களினால் எடுக்கப்பட்ட படங்களின் உதவியுடன் குப்பைகள் மிகுந்துள்ள இடங்கள் கண்டறியப்பட உள்ளன. 

    இதற்கு முன்னர் இந்த முறையானது காடுகள் அழிக்கப்படுவதைக் கண்டறியப் பயன்பட்டது. ஆனால் பிளாஸ்டிக்குகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

    தென்கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய மாகாணங்கள் உட்பட இதுவரை 25 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குப்பை பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஐந்தில் ஒரு பகுதி நீர்நிலைகளுக்கு அருகில் உள்ளதாய் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 690 பகுதிகள் இந்த முறைகொண்டு கண்டறியப்பட்டுள்ளது.

    அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் கடலில் கலக்கும் குப்பைகளை 70 சதவீதம் வரை குறைக்க பல நாடுகள் உறுதிமொழியேற்றுள்ள நிலையில் இந்த குளோபல் வாட்ச் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    30 வருட ஆட்சி காலத்தில் முதல் முறை!! பிரான்ஸ் நாட்டின் பிரதமராய் பதவி ஏற்கும் எலிசபெத் போர்ன்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....