Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிஃபார்மை எனக்கு போடுங்க' - தற்கொலைக்கு முன்பான மாணவியின் கடிதம்!

    ‘நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிஃபார்மை எனக்கு போடுங்க’ – தற்கொலைக்கு முன்பான மாணவியின் கடிதம்!

    கடலூர் மாவட்டம் செம்மண்டலம் அருகே, தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கல்லூரியின் கழிப்பறையிலேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி அமைந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலையில் இதில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் வகுப்புகள் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும் மாலை வகுப்புகள் சுயநிதி கல்லூரியாகவும் இயங்கி வருகின்றது.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் சின்னப்ப சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (19) என்ற மாணவி பிகாம் முதலாமாண்டு இக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகிலேயே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரி துவங்கிய உடன் மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகள் அங்கு ஒரு மாணவி தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர்.

    பின்னர், பேராசிர்களும் காவல்துறைக்கு தகவல் சொல்ல, கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர், விசாரணையில் தான் தனலட்சுமி எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியிருக்கிறது. இந்த கடிதத்தில், “தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது. இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செயற்கைக் கோளின் துணை கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளைக் கண்டறிய புதிய முயற்சி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....