Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்30 வருட ஆட்சி காலத்தில் முதல் முறை!! பிரான்ஸ் நாட்டின் பிரதமராய் பதவி ஏற்கும் எலிசபெத்...

    30 வருட ஆட்சி காலத்தில் முதல் முறை!! பிரான்ஸ் நாட்டின் பிரதமராய் பதவி ஏற்கும் எலிசபெத் போர்ன்!!

    61 வயது நிரம்பிய எலிசபெத் போர்ன் என்பவர் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இவர் தற்போது அதிபராய் இருக்கும் இம்மானுவேல் மக்ரோனின் முந்தைய ஆட்சிக்காலத்தில் தொழில் துறை அமைச்சராய் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்னர் பிரதமராய் இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது எலிசபெத்திற்கு புதிய பிரதமர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    எலிசபெத் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ஆகியோர் பிரான்ஸ் நாட்டின் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பதவியின் மூலம் கடந்த 30 ஆண்டுகால பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையினை எலிசபெத் பெற்றுள்ளார். இவருக்கு முன்னராக 1991-92ம் ஆண்டில் எடித் கிரெஸ்ஸோன் என்பவர் பெண் பிரதமராய் இருந்துள்ளார். எடித் பொறுப்பேற்ற பொழுது பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வும், வேலையில்லாத திண்டாட்டமும் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிகம் அறியப்படாத பிரதமராய் இருந்த எடித் ஒரு வருட காலம் மட்டுமே பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு அரசியலில் இரண்டாவது பெண் பிரதமராய் பதவி ஏற்கவுள்ள எலிசபெத் இடதுசாரி அரசியல்வாதிகளாலும், தொண்டர்களாலும் விமர்சிக்கப் பட்டுவருகிறார்.

    எலிசபெத்தின் அரசியல் வரலாறு சற்று கலவையான விமர்சனத்தினை பெற்றுள்ளதாய் உள்ளது. தொழில்துறை அமைச்சராய் இருந்த காலத்தில் இவரது நடைமுறைகள் வேலையில்லாத மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளைப் பெறுவதில் கடினத்தினை உண்டாக்கியது. 

    போக்குவரத்துத் துறை அமைச்சராய் இருந்த காலத்தில் SNCF தொடர்வண்டி நிறுவனத்தினர் பெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதிய வேலையாட்களை எடுப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிர்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் அவர் அந்த மசோதாவினை நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எலிசபெத்தின் அரசியல் வாழ்க்கை வல்லமை மிக்கதாய் இருந்தது. 2017ம் ஆண்டு இம்மானுவேலின் கட்சியில் இணைந்த எலிசபெத், போக்குவரத்து அமைச்சராகவும், சுற்றுச்சூழல் மாறுபாடு தொடர்பான அமைச்சராகவும் பதவி வகித்தவர். 

    பிரான்ஸ் அரசியலில் ஒரே ஆட்சிக்காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதமர்களை வைத்திருப்பது பொதுவான ஒன்றாய் கருதப்படுகிறது.

    பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? அமைச்சரின் விளக்கங்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....