Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்னது, நான் இறந்துட்டேனா ? - நித்யானந்தா எழுதிய கடிதம்!

    என்னது, நான் இறந்துட்டேனா ? – நித்யானந்தா எழுதிய கடிதம்!

    சர்ச்சைக்குரிய சொகுசு சாமியார் நித்யானந்தா மரணப்படுக்கையில் இருக்கிறார் என்பதை அவரே உறுதி செய்து சமூகவலைதளப் பதிவுகளாக வெளியிட்டு வருகிறார். நித்யானந்தா பசி பட்டினியால் செத்து வருவதாக ஒருதரப்பு விமர்சித்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு ஃபுல்டைம் எண்டர்டைமென்ட் சாமியராக நித்யானந்தா உலா வருகிறார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

    இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நித்யானந்தா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    நித்யானந்தா என்றால் சர்ச்சை… சர்ச்சை என்றால் நித்யானந்தா என்கிற அளவுக்கு சர்ச்சைக்கு சொந்தக்காரராக இருந்த நித்யானந்தா, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் உட்பட அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.

    கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும் அந்த நாட்டிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவராததால், என்ன என்று பலரும் விசாரிக்க, அப்போது தான் அவர் உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

    இதை அடுத்து நித்யானந்தா உடல்நிலை குறித்து பலரும் பலவிதமாக சொல்லி வந்தனர். அவர் உயிருடன் இல்லை என்று சிலர் சில தகவல்கள் பதிவிட்டு வந்தனர். எப்போதும் வீடியோ மூலமாக பேசி வரும் அவர் இப்போது கடிதம் மூலமாக தனக்கு ஏற்பட்டது குறித்து சொல்லி வருகிறார். நான் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என்று கடிதம் மூலமாக தெரிவித்தார். தன்னைச் சுற்றி 27 மருத்துவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். பரிசோதனைகள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் நித்யானந்தா குறிப்பிட்டு இருந்தார் .

    இதன் பின்னர், தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் இந்த கடிதத்தில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் கீழே சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு கொரோனா கிடையாது;புற்றுநோயும் கிடையாது; இதய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு 18 வயது இளைஞனுக்கு இருப்பது போல் தான் எனக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ரத்த அழுத்தம் இல்லை. சர்க்கரை நோய் இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை. வைரஸ் தொடர்பான நோய்களும் இல்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்றிருக்கிறார், நித்யானந்தா.

    ‘ரத்த அழுத்தத்துக்கு இனி நோ சொல்லுங்க’ – உலக உயர் ரத்த அழுத்த தின கட்டுரை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....