Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவேதியியல் பிரிவில் பட்டம் பெற்று வேலை தேடுபவரா? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...

    வேதியியல் பிரிவில் பட்டம் பெற்று வேலை தேடுபவரா? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…

    தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நிரப்பப்பட உள்ள 45 காலிப்பணியிடங்களுக்கு, மாத ஊதியமாக ரூ.9,200 – 32,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதன்படி, வேதியியல், தொழிலக வேதியியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 35-க்குள் இருக்க வேண்டும். வேலைக்கு தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும்.

    எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் பிறருக்கு ரூ.590-ம் விண்ணப்ப கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடத்திற்கு www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ண ப்பிப்பதற்கு நாளையே கடைசி நாள்.

    இதையும் படிங்கபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....