Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்

    உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்துக்கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாநாடானது நடைபெறவுள்ளது. இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும்.

    இந்த ஜி20 அமைப்பில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள், நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

    இந்த மாநாடு இந்தோனேசியாவின் பாலி பகுதியில் வருகிற 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என்று இந்தோனேசியாவில் உள்ள ரஷிய தூதரகத்தின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். புதின் வராத தகவல் உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    மேலும், ரஷிய தரப்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தலைமையிலான குழுவினர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க‘சிக்கன் ரைஸ்’ வராததால் சின்னா பின்னமான ஹோட்டல்.! நண்பர்களுடன் வாலிபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....