Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்தியாவில் எப்படி இருக்கிறது வேலைவாய்ப்பின்மை விகிதம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    இந்தியாவில் எப்படி இருக்கிறது வேலைவாய்ப்பின்மை விகிதம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    நாட்டில் வேலைவாய்ப்பின்மையில் தமிழகம் 20-ஆவது இடத்தில் உள்ளதாக சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து நிகழ்ந்துதான் கொண்டிருக்கிறது. படித்த பட்டதாரிகள் முதல் பலரும் வேலையில்லாமல் துயருடன் நாட்டில் இருக்கின்றனர். 

    இந்நிலையில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், அக்டோபர் மாதத்தில் 7.77 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது. 

    மேலும், மொத்தம் 25 மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளை சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ளது. அதன்படி பார்த்தால், நாட்டில் வேலைவாயப்பின்மையில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் 20-வது இடத்தில் உள்ளது. 

    கடந்த செப்டம்பரில், 6.43 சதவீதமாக குறைந்திருந்தது. செப்டம்பரில் கடந்த நான்கு ஆண்டுகளில் குறைவான விகிதமாக இருந்த நிலையில், அக்டோபரில் வேலைவாய்ப்பின்மை விகிதம், 7.77 சதவீதமாக அதிகரித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    அக்டோபரில் ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், வேலைவாய்ப்பின்மை விகிதம் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கமோடி வருகையால் பதட்டம்! ஐந்தடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....