Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நடைபெற்ற ஆதிதிராவிடர் ஆய்வுக்கூட்டம்; பயன்கள் மக்களை அடையுமா?

    நடைபெற்ற ஆதிதிராவிடர் ஆய்வுக்கூட்டம்; பயன்கள் மக்களை அடையுமா?

    ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ என்‌.கயல்விழி செல்வராஜ்‌ தலைமையில்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை ஆய்வுக்‌ கூட்டம்‌ நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ கல்வி, சமூக மற்றும்‌ பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்‌டு வரும்‌ பல்வேறு திட்டங்கள்‌ சூறித்தும்‌, இத்துறையில்‌ வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்‌ தற்போதைய நிலை குறித்தும்‌ விவாதிக்கபட்டது. 

    இந்நிலையில், இந்த ஆய்வுக்கூட்டம் குறித்த செய்திக்குறிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இக்கூட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்களை நிரப்புதல்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்‌ தொகைகள்‌ உரிய காலத்தில்‌ மாணவர்களுக்கு வழங்குதல்‌, வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்‌ பட்டா திட்டத்தின்‌ கீழ்‌, விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு நிலுவையில்‌ உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப்‌ பட்டாக்களை வழங்குதல்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வன்கொடுமை தடுப்புச்‌ சட்டம்‌ உரிய முறையில்‌ அமல்படுத்துதல்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ குடியிருப்புகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப்‌ பணிகள்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ சமூக மற்றும்‌ பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌, பல்வேறு திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகள்‌ மற்றும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ ஆகியவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர்‌ இப்பணிகளின்‌ பயன்‌ அதிகளவில்‌ மக்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடுமாறு வலியுறுத்தினார்‌.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தென்காசி சு.ஜவகர்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை கூடுதல்‌ செயலாளர்‌ எஸ்‌. பழனிசாமி, ஆதிதிராவிடர்‌ நலத்துறை இயக்குநர்‌ த.ஆனந்த்‌, தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌மேலாண்மை இயக்குநர்‌ கே.எஸ்‌.கந்தசாமி , சமூக நீதி மற்றும்‌ மனித உரிமைகள்‌ பிரிவின்‌ உதவி காவல்துறை தலைவர்‌ பி.ஆர்‌.வெண்மதி, பழங்குடியினர்‌ நலத்துறை இயக்குநர்‌ அண்ணாதுரை போன்றோர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கவேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க அவசர சட்டம்.. கேரள அரசின் முடிவுக்கு விடியல் கிடைக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....